Read in English
This Article is From Sep 06, 2018

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 2 புராதன சிலைகளை, மீட்டுத் தந்தது அமெரிக்கா

சிவனின் லிங்கோத்பவ மூர்த்தி வடிவம் செதுக்கப்பட்ட கிரானைட் சிலை

Advertisement
இந்தியா
Washington:

இந்தியாவில் இருந்து திருடப்பட்டு அமெரிக்க அருங்காட்சியகங்களில் இருந்த பல லட்சம் டாலர்கள் மதிப்புடைய இரண்டு சிலைகளை, இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அந்நாடு.

அதில் ஒரு சிலை ,சிவனின் லிங்கோத்பவ மூர்த்தி வடிவம் செதுக்கப்பட்ட கிரானைட் சிலை. இது 12-ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சிலை. இதன் மதிப்பு 2,25,000 டாலர்கள். இது தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு, அலபாமாவின் பிரிமிங்கம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது சிலை போதிசத்வாவின் ஞான வடிவம். மஞ்சரியின் கையில் வாள் இருப்பது போன்ற அந்த சிலை 12-ம் நுற்றாண்டைச் சேர்ந்தது. பீஹாரின், புத்த கயா கோயில் அருகே இருந்து 1980-ம் ஆண்டு கடத்தப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு 2,75,000 டாலர்கள். இது வடக்கு காரோலினாவில் உள்ள ஆக்லாந்து ஆர்ட் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் இரண்டும் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு வந்ததற்கான ஆதாரங்களைக் காட்டி இந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

நியூயார்க்கில் இருக்கும் இந்தியாவுக்கான தூதர் சந்தீப் சக்கரவர்த்தியிடம், மான்ஹாட்டன் மாவட்ட அட்டார்னி ஜெனரல் சைரஸ் வேன்ஸ் ஒப்படைத்தார்.
 

Advertisement
Advertisement