Read in English
This Article is From Jun 30, 2018

சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியாளர்கள்: கண்டனத்தைப் பதிவு செய்ய குவிந்த பத்திரிகையாளர்கள்!

அமெரிக்காவில் உள்ள பத்திரிகை அலௌவலகம் ஒன்றில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பத்திரிகையாளர்களில் ஐந்து பேரை சரிமாரியாக சுட்டு கொன்றுள்ளான்.

Advertisement
உலகம்

Highlights

  • அமெரிக்காவின் மரிலேண்டு மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்தது
  • இச்சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்
  • கேபிடல் கெசட் என்ற பத்திரிகை அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்தது
Annapolis:

அமெரிக்காவில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பத்திரிகையாளர்களில் ஐந்து பேரை சரிமாரியாக சுட்டு கொன்றுள்ளான். இதையடுத்து அமெரிக்காவின் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

மேரிலாண்டில் உள்ள அன்னாபோலிஸ் நகரத்தில் வெளியாகும் அத்தனை தினசரிகளிலும், “தலைநகரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஐவர்” என்ற தலைப்பில் செய்தித்தாள்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு செய்தித்தாளிலும் ஆசிரியர் பக்கத்தில் ‘நாங்கள் பேச்சற்றுக் கிடக்கிறோம்’ என்பதைக் கூறும் வகையில் செய்தித்தாளின் நடுப்பக்கம் வெள்ளைப் பக்கமாக காலியாக விடப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் மீது நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது என ஒட்டுமொத்த பத்திரிகை உலகமும் கண்டனங்களைத் தெரிவித்தும் பதிப்பித்தும் உள்ளது.

38 வயதான ஜெராட் ராமோஸ் என்ற நபர் தான் இப்படுகொலைகளுக்குக் காரணமான குற்றவாளியாக நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். ஆனால், காவல்துறை இச்சம்பவம் குறித்தும் இதன் பின்னணி குறித்தும் தீர்க்கமான ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு இந்த ரமோஸ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குக் குறித்தான தீர்க்கமான ஆய்வுச் செய்தியை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

‘தி பால்டிமோர் சன்’, ‘தி கேப்பிடல்’ ஆகியவை இறந்த பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களின் பெருமையை பதிவிட்டுள்ளனர். 59 வயதான ராப் ஹியாசன் ‘வார்த்தைகளையும் நகைச்சுவையையும் விரும்புபவர்’ என்று பாரட்டப்பட்டுள்ளார்.

61 வயதான ஜெரால்டு ஃபிஷ்மேன், 25 ஆண்டுகளாக எடிட்டோரியல் பக்கத்தில் எழுதி வருகிறார். 56 வயதான ஜான் மெக்னாமரா விளையாட்டு நிருபர் ஆவார்.

65 வயதான வெண்டி வின்டர்ஸ், மக்கள் நிரூபராக அறியப்படுகிறார். 34 வயதான ரெபெக்கா ஸ்மித் தற்போது புதிதாக கல்யாணம் நிச்சயமாகி உள்ள புதுப் பணியாளர் ஆவார்.

இவர்கள் ஐவருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஆழ்ந்த இரங்கலை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Advertisement