அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பேட்டியளித்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பேட்டியளித்துள்ளார்
- கொரோனா வைரஸுக்கான மருந்தை கண்டுபிடிப்பு பணிகள் தீவிரம்
- அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு 6-ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்து வரும் நிலையில், அதனைச் சரி செய்யும் மருந்து கோடைக் காலத்திற்குள் சந்தைக்கு வரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் அளித்துள்ள பேட்டியில், 'கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போது வரைக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இந்த கோடைக் காலத்திற்குள் கொரோனா வைரஸுக்கான மருந்து சந்தைக்கு வந்து விடும்' என்றார்.
கொரோனா வைரஸுக்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் வேலையில் அமெரிக்காவை சேர்ந்த மருந்துக் கம்பெனிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அது, 6 வாரங்களுக்குச் சோதனை முயற்சியில் ஈடுபடுத்தப்படும் என்று அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-யை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100- கடந்திருக்கிறது.
உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவை சேர்ந்தவர்கள்.
உலக அளவில் முதலில் 1,804 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 89 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது.