This Article is From Sep 09, 2019

Chandrayaan 2: சந்திரயான்-2 மிஷன் இந்தியாவுக்கு ஒரு பெரிய படியாகும்: அமெரிக்கா பாராட்டு

Chandrayaan 2 Mission: நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு லேண்டர் விக்ரம் தொடர்பு இழந்தது. இந்தியாவை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கும் நான்காவது நாடாக மாற்றியிருக்கும்.

Chandrayaan 2: சந்திரயான்-2 மிஷன் இந்தியாவுக்கு ஒரு பெரிய படியாகும்: அமெரிக்கா பாராட்டு

இஸ்ரோவின் முயற்சிக்கு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.

New Delhi:

சந்திரயான் 2 பணிகள் 'இந்தியாவுக்கு ஒரு பெரிய படியாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், இது விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு எரிபொருளைத் தரும் மதிப்புமிக்க தரவைத் தொடர்ந்து உருவாக்கும் என தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் செயல் உதவி செயலாளர் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் முயற்சிக்கு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா  பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விண்வெளி ஆய்வு மிகவும் கடினமானது.

நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். எதிர்கால  திட்டங்களில் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளது.
 


இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கான கடைசி பகுதி திட்டமிட்டபடி சரியாக செயல்படுத்தப்படவில்லை.

அந்த பகுதியில் தான் நாம் லேண்டருடனான தகவல் தொடர்பை இழந்துள்ளோம், பின்னர் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை," அடுத்த 14 நாட்களில் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என்று அவர் கூறினார்.

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை இழந்த ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயல்பட்டு நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.

இந்த ஆர்பிட்டர் கருவி ஒரு வருடகால பயன்பாட்டிற்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் எரிபொருள் அதிகமாக இருப்பதால் சுமார் ஏழரையாண்டுகள் வரை செயல்படும். இதனால், சந்திரயான்-2 திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது என்றார். 
 

.