அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 7,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,400 ஆக அதிகரித்துள்ளது.
- உலகளவில் ஒரேநாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகும்.
- மொத்த பாதிப்பு எண்ணிக்கை 200,000 மேல் அதிகரித்துள்ளது.
Washington: அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 1,480 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன. இது கொரோனா தொற்றுக்கு உலகளவில் ஒரேநாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகும்.
இது கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை 8.30 மணி வரையிலான நேரத்தில் உள்ள எண்ணிக்கை என பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,406ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, நேற்றைய தினம் 24 மணி நேரத்தில் 1,169 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவித்தன.