Read in English
This Article is From Mar 12, 2019

அதிகாரிகளை வெனிசுவேலாவை விட்டு வெளியேற சொல்லும் அமெரிக்கா!

அமெரிக்க கொள்கைகளின் படி வெனிசுவேலாவில் நிலைமை கட்டுப்பாட்டுக்கு வரும் வரையில் அமெரிக்க அதிகாரிகளை திரும்ப பெறுவது என்ற முடிவை அமெரிக்கா எடுத்துள்ளதாக பாம்பியோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement
உலகம் Edited by

ஜனவரி 24ம் தேதி அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு வெனிசுவேலாவை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வெனிசுவேலாவில் நிலைமை மோசமான நிலையை எட்டியுள்ளதால் அமெரிக்கா அதன் அதிகாரிகளை கரகாஸில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதனை வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கொள்கைகளின் படி வெனிசுவேலாவில் நிலைமை கட்டுப்பாட்டுக்கு வரும் வரையில் அமெரிக்க அதிகாரிகளை திரும்ப பெறுவது என்ற முடிவை அமெரிக்கா எடுத்துள்ளதாக பாம்பியோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 24ம் தேதி அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு வெனிசுவேலாவை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெனிசுவேஎலாவில் அதிபர் மடுரோ அதிகாரப்போட்டியில் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார். அதனால் பொருளாதார நெருக்கடியில் வெனிசுவேலா சிக்கியுள்ளது. 

அப்போதே அமெரிக்கர்களை வெனிசுவேலாவிலிருந்து வெளியேற சொல்லி அறிவிப்புவிடுத்தது அமெரிக்கா.

Advertisement
Advertisement