Read in English
This Article is From Dec 21, 2018

சிரியாவை தொடர்ந்து ஆப்கானிலும் படைகளைத் திரும்ப பெறும் அமெரிக்கா!

தற்போது ஆப்கானில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் 14000 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
உலகம்

ராணுவத்தை திரும்ப பெறும் இந்த முடிவு தேவையற்ற ராணுவ மனித வளங்களை அங்கு வைக்க வேண்டாம் என்று அமெரிக்க கூறியுள்ளது. 

Washington:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஆப்கானிஸ்தனிலிருந்து கணிசமான ராணுவ படைகளை நாடு திரும்ப சொல்லியுள்ளார். இதற்கு முந்தைய நாள் சிரியாவிலிருந்தும் ஒரு பகுதி படையை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தார்.

ராணுவத்தை திரும்ப பெறும் இந்த முடிவு தேவையற்ற ராணுவ மனித வளங்களை அங்கு வைக்க வேண்டாம் என்று அமெரிக்க கூறியுள்ளது. 

தற்போது ஆப்கானில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் 14000 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ட்ரம்ப் கடந்த செவ்வாயன்று எடுத்த முடிவில் சிரியாவிலிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்தார். 

சமீபத்தில் பாதுகாப்பு செயலாளர் மாட்டிஸ் ட்ரம்ப்புடனான கருத்து வேறுபாட்டால் பதவி விலகினார். 

Advertisement

மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் கணிக்க முடியாத செயல்கள், ட்ரம்ப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மாட்டிஸ் மற்றும் மற்ற ராணுவ ஆலோசகர்கள் "கடந்த வருடம் தாலிபான் தாக்குதல் இருந்ததால் 1000த்துக்கும் அதிகமான படைவீரர்களை ஆப்கான் அனுப்ப ட்ரம்ப் திட்டமிட்டார்" என்று கூறியுள்ளனர்.

Advertisement

ஆனால் தற்போது ட்ரம்ப் அதிலிருந்து தன் முடிவை மாற்றியுள்ளதாகவும் , தாலிபான்களுடன் அமெரிக்க அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபடப்போவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தகவல்படி ட்ரம்ப் 7000 வீரர்களை அமெரிக்க திரும்ப உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement