ஹைலைட்ஸ்
- ஈரானிடமிருந்து அதிகமாக எண்ணெய் பெரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று
- மற்றொறு நாடு சீனா
- இந்நிலையில், ஈரானிடமிருந்து எண்ணெய் பெருவதை நிறுத்த அமெரிக்கா கோரிக்கை
Washington: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளதாக நம்பத்தகுந்த நபர் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக, தற்போது தன் தோழமை நாடுகளுக்கு சில வேண்டுகோள்களை அமெரிக்கா விடுத்து வருதவதாக கூறப்படுகிறது. ‘மத்திய கிழக்கு பகுதியில் ஈரானின் செயல்பாடுகளை கண்டிக்க வேண்டும்’ என்பதற்காக அமெரிக்கா இந்த புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரி, ‘இந்தியா மற்றும் சீனாவிடம், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று நாங்கள் கோரிக்கை வைத்துள்ளது உண்மை தான். ஈரானின் வருவாய்க்கு முடக்குப் போடுவதற்கு இரு நாடுகளும் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் ஏதுவாக இருக்கும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதிக்குள் ஈரானிடமிருந்து இந்த இரு நாடுகளும் எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடுத்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளனர். பயணத்தின் போது, அவர்கள் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை மற்றும் ராணுவத் துறை அமைச்சர்களை சந்திப்பர் என்று எதிர்பார்க்கப்பகிறது. அப்போது ஈரானிடமிருந்து எண்ணெய் பெரும் விஷயம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.