"ஒரு பில்லியன் டாலர் நிதி திரட்டி தருவதே லட்சியம்" என்று ப்ரைன் கோல்ஃபாஜ் கூறியுள்ளார்.
Miami: இதுவரை அமெரிக்க அதிபரால், அமெரிக்க நாடாளுமன்றத்திலும், மெக்ஸிகோவிடமும் அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப பணம் பெற முடியவில்லை. க்ரவுட் ஃபண்டிங் மூலம் சுவர் கட்ட வேண்டும் என்ற விஷயமும் வலுத்து வருகிறது.
இந்நிலையில், ஈராக் போரில் ஈடுபட்ட அமெரிக்கரான ப்ரைன் கோல்ஃபாஜ் 5 நாட்களில் 12 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியாக பெற்றுள்ளார். 'GoFundMe' என்ற கணக்கில் பணம் செலுத்தும்படி கூறியிருந்தார். "நாம் தான் சுவர் எழுப்ப நிதியளிக்க வேண்டும்" என்று பிரசாரம் செய்து இந்தத் தொகையை வாங்கியுள்ளார்.
5 நாட்களில் 12 மில்லியன் திரட்டிய இவர், ஒரு பில்லியன் டாலர் நிதி திரட்டி தருவதே லட்சியம் என்று கூறியுள்ளார். மேலும், "ட்ரம்புக்கு வாக்களித்த 63 மில்லியன் பேரும் தலா 80 டாலர் தந்தாலே 5 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டுவிடும். எளிதாக சுவரை எழுப்பிவிடலாம். இதில் பாதியை திரட்டி விட்டாலே பாதி சுவரை எழுப்பிவிடாலாம்" என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மூன்றாம் பாலினத்தவருக்கான ராணுவ அதிகாரி க்ளெய்மெர் ''சிலர் சுவர் கட்ட நிதி திரட்டுவது. எல்லையில் இருக்கும் புலம்பெயர்ந்த குடும்பங்களை பதறவைக்கிறது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் 2015 தனது தேர்தல் பிரசாரத்தைத் துவங்கியதிலிருந்து, இந்தத் திட்டம் பற்றி கூறிவருகிறார். 3110 கீமி நீளமுள்ள சுவரை கட்டி முடிக்க 70 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.