This Article is From Sep 21, 2018

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்புக்கு அமெரிக்கா வரவேற்பு

ஐ.நா. பொது சபையில் நடைபெற உள்ள கூட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசுவார்கள்

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்புக்கு அமெரிக்கா வரவேற்பு

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திக்க உள்ளனர்

Washington:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. பொது சபையில் இந்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் சந்தித்து பேசுவார்கள் என்று தகவல் வெளியானது.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, கர்டார்பூர் சாஹிப் விவகாரம் பற்றி சுஷ்மா சுவராஜ் இந்த கூட்டத்தில் விவாதங்களை எழுப்புவார் என்று தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நயூர்ட் பேசுகையில், இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சந்தித்து பேச இருப்பதான தகவல் மிகவும் சிறப்பான செய்தி என்று நான் கருதுகிறேன்" என்றார்.

.