This Article is From Feb 09, 2019

ஒரு வாரமே வாழ்ந்தாலும் பல உயிர்களை காப்பாற்றிய குழந்தை!

இறந்த குழந்தையின் இதைய வால்வுக்கள் வேறு குழந்தைகளுக்கும் நுரையீரல் மருத்துவ பரிசோதனைக்கும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரமே வாழ்ந்தாலும் பல உயிர்களை காப்பாற்றிய குழந்தை!

இறந்த குழந்தையின் இதைய வால்வுக்கள் வேறு குழந்தைகளுக்கும் நுரையீரல் மருத்துவ பரிசோதனைக்கும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Washington:

வாஷிங்டனை சேர்ந்த கிரையஸ்டா டேவிஸ் என்னும் 18 வாரங்கள் கர்பமாக இருந்த பெண்னிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மகளாக பிறக்க இருந்த ரையில் ஆர்காடியா டையானே லோவேட் கருவிலேயே ஒரு குறைபாட்டுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அனென்சிபேலே என்னும் அக்குறைபாட்டால் குழந்தையின் மூளை மற்றும் மண்டை ஓடில் சில பகுதிகள் இல்லாமல் பிறக்கும் என தெரியவந்தது. மேலும் பிறந்தாலும் 30 நிமிடங்கள் மட்டுமே அக்குழந்தையால் வாழ முடியும் என்ற குறையும் இருந்தது. மருத்துவர்கள் கிரையஸ்டாவுக்கு இரண்டு சாய்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டது.

கருவை கலைக்கும் முறை மற்றும் ஈன்ற பிறகு குழந்தையின் உறுப்புக்களை தானம் செய்வது. அதை தொடர்ந்து கிருஸ்துமஸ் வாரத்தில் பிறந்த அக்குழந்தை யாரும் எதிர்பார்காமல் ஒரு வாரம் வரை வாழ்ந்து இறந்தது. மேலும் அந்த தாய் தனது குழந்தையின் உறுப்புக்களை உடனடியாக தானம் செய்தார்.

‘அவள் இறக்கும் அந்த நெடிவரைக்கும் அவளுடன் இருந்தது எங்களுக்கு போதும். இருதியல் அவளுக்கு மூச்சு தினரல் ஏற்படும் வரை அவள் அழுகவே இல்லை' என அந்த தாய் கூறினார்.

அக்குழந்தையின் இதைய வால்வுக்கள் வேறு குழந்தைகளுக்கும் நுரையீரல் மருத்துவ பரிசோதனைக்கும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

.