டிஸ்னி நிறுவனம் சமீபத்தில், ஆப்ரிக்காவில் உள்ள யானைக் குடும்பத்தைப் பற்றிய ஆவணப் படம் ஒன்றில், மேகன் பணியாற்ற உள்ளார் என்று கூறியது.
ஹைலைட்ஸ்
- இங்கிலாந்து ராணியின் உற்றத் தோழன் நான்: டிரம்ப்
- கனடாவில் வசித்து வந்தனர் ஹாரியும் மேகனும்
- தற்போது அவர்கள் அமெரிகாகவில் இருப்பதாக தெரிகிறது
Washington: இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த அவர்களுக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும், அவர்களின் சொந்த செலவில் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவத் தொடங்கியபோது, ஹாரியும் மேகனும் கனடாவில் இருந்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் உடனடியாக அங்கிருந்து கலிபோர்னியாவில் உள்ள தங்களது இல்லத்துக்கு தனியார் ஜெட் மூலம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக கனடாவில் வசித்து வந்த ஹாரியும் மேகனும், தங்களது அரச பதவிகளைத் துறக்கப் போவதாகவும், புது வாழ்க்கையைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்து இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர். தற்போது அவர்கள் அமெரிக்காவில் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் டிரம்ப், “இங்கிலாந்து ராணிக்கும், இங்கிலாந்துக்கும் நான் உற்ற தோழன். இந்நிலையில் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி ஹாரியும் மேகனும் கனடாவில் வசிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். எனவே, அமெரிக்கா அவர்களின் பாதுகாப்புக்காக செலவு செய்யாது. அவர்களின் பாதுகாப்பை அவர்கள்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்,” என்று கறார் தொனியில் ட்வீட் செய்துள்ளார்.
மேகன், லாஸ் ஏஞ்சலஸில்தான் வளர்ந்தார். அவரின் அம்மா இன்னும் லாஸ் எஞ்சலஸில்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகரும், கலைத் துறையில் பணி செய்தவருமான மேகனுக்கு லாஸ் ஏஞ்சலஸில் பல்வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளது. எனவே, அவர் மீண்டும் தனது கலை வாழ்க்கையைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்னி நிறுவனம் சமீபத்தில், ஆப்ரிக்காவில் உள்ள யானைக் குடும்பத்தைப் பற்றிய ஆவணப் படம் ஒன்றில், மேகன் பணியாற்ற உள்ளார் என்று கூறியது.
சமீபத்தில் போலி போன் கால் ஒன்றில் சிக்கினார் ஹாரி. அந்த போன் அழைப்பில், அதிபர் டிரம்ப்பின் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நிலைப்பாட்டை விமர்சித்துப் பேசினார்.
மார்ச் 31 ஆம் தேதி முதல் தங்கள் அரச பதவிகளைத் துறந்து, அரச பொறுப்புகளில் இருந்து வெளியேறுகின்றனர் ஹாரி மற்றும் மேகன்.