நல்லவிதமாக பட்ஜெட் கூட்டத் தொடரை பயன்படுத்துங்கள் என்று மோடி கூறியுள்ளார்.
New Delhi: பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. வரும் 13-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
சிறிய விஷயங்களாக இருந்தாலும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசப்படும் விஷயங்கள் சாதாரண மக்களை சென்றடையும். விவாதங்களில் ஆர்வம் இல்லாதவர்கள், கூச்சல் குழப்பத்தை எற்படுத்துகின்றனர்.
அனைத்து எம்.பி.க்களும் கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவார்கள் என்று கருதுகிறேன். அனைவருக்குமான வளர்ச்சி என்பதை அடிப்படையாக கொண்டு மத்திய பாஜக அரசு செயல்படுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.