This Article is From Sep 28, 2019

Tea Bags பயன்படுத்துபவரா நீங்கள்?- 1,100 கோடி Plastic பொருட்களால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு!

Tea Bags Plastic Particles - மெக்கில் பேராசிரியர்கள் செய்த ஆய்வு, ஒரு டீ பேக் மூலம் எவ்வளவு பிளாஸ்டிக்ள நம் உடலில் சேர்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Tea Bags பயன்படுத்துபவரா நீங்கள்?- 1,100 கோடி Plastic பொருட்களால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு!

Tea Bags Plastic Particles - வெறும் கண்களால் இந்த பிளாஸ்டிக் கலப்பைப் பார்க்க முடியாது. எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் அதைக் காண முடியும்.

நாதலி துஃபெங்கி (Nathalie Tufenkji), இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பணிக்குச் செல்வதற்கு முன்னர் மான்ட்ரியல் (Montreal) உள்ள ஒரு கஃபே-யில், ஒரு கப் டீ ஆர்டர் செய்து பருகியுள்ளார். சுடான டீ இதமாக தொண்டைக்குள் இறங்கும்போது நாதலி ஒரு விநோதமான விஷயத்தைப் பார்த்துள்ளார். தேனீரின், டீ-பேக் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டதோ என்ற சந்தேகம் அவருக்கு எழுந்துள்ளது. 

“கொதிக்கும் நீரில் பிளாஸ்டிக் பை இருப்பது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது,” என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துள்ளார் நாதலி. 

மெக்கில் பல்கலைக்கழகத்தின் வேதியல் துறை பேராசிரியராக பணி செய்யும் நாதலிக்கு, இந்த சம்பவம் மனதை உருத்தியுள்ளது. பிளாஸ்டிக் பையிலிருந்துதான் அனைவரும் தேனீர் பருகுகிறார்கள் என்பதை கவனித்த அவர், அதை சோதனைக்கு உட்படுத்த தயாரானார். 

நாதலி, தனது சந்தேகம் உண்மை என்பதை சீக்கிரமே தெரிந்து கொண்டார். பிளாஸ்டிக் டீ பையின் மூலம் கோடிக்கணக்கான நெகிழிப் பொருட்கள் சூடான நீருக்குள் கலந்து கொண்டிருந்தன என்பதை அவர் ஆதாரபூர்வமாக கண்டுகொண்டார். 

தொடர்ந்து மெக்கில் பல்கலைக்கழகத்தின் சக பேராசிரியர்களோடு தீவிரமான ஆய்வை மேற்கொண்டார். அதில் பிளாஸ்டிக் டீ பைகள், 1,100 கோடி மைக்ரோ பிளாஸ்டிக் பொருட்களையும், 300 கோடி நானோ பிளாஸ்டிக் பொருட்களையும் வெளியிட்டு வருவது கண்டறியப்பட்டது. 

வெறும் கண்களால் இந்த பிளாஸ்டிக் கலப்பைப் பார்க்க முடியாது. எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் அதைக் காண முடியும். அவர்களின் கண்டுபிடிப்பு இம்மாத American Chemical Society journal Environmental Science & Technology வெளியிடப்பட்டிருக்கிறது.

4 வித பிளாஸ்டிக் பொருட்களில் ஆய்வு செய்துள்ள நாதலி மற்றும் பிற பேராசிரியர்கள், மான்ட்ரியலில் உள்ள சாதாரண மளிகைக் கடையிலிருந்து அதை எடுத்துள்ளனர். ஆய்வின் முடிவில் பாலிஸ்டர், நைலான் உள்ளிட்ட பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கைத்தான் டீ பேகிற்கும் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளார்கள். 

தினமும் டீ பேக் உபயோகப்படுத்தி தேனீர் பருகுபவர்கள் பல கோடி பிளாஸ்டிக் பொருட்களை தங்களை அறியாமலேயே உட்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வின் மூலம் நிறுவியுள்ளது நாதலி குழு. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் WWF எனப்படும் World Wide Fund-ன் ஆராய்ச்சி முடிவுகள், ஒரு மனிதர் ஒரு வாரத்துக்கு சராசரியாக 5 கிராம் அளவுக்குப் பிளாஸ்டிக்-ஐ உட்கொள்கிறார் என்று அதிர்ச்சிகதர தகவலைத் தெரிவித்தது. இது ஒரு கிரெடிட் கார்டின் அளவாகும். பிளாஸ்டிக் நம் உடலோடு சேர்வதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து பலகட்ட ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. சீக்கிரமே அது குறித்த விரவான முடிவுகள் வரும். 

மெக்கில் பேராசிரியர்கள் செய்த ஆய்வு, ஒரு டீ பேக் மூலம் எவ்வளவு பிளாஸ்டிக்ள நம் உடலில் சேர்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அதனால் ஏற்படும் தாக்கம் குறித்து அவர்களின் ஆய்வில் தகவல் இல்லை. 

இது குறித்து நாதலி, “நாங்கள் மக்களுக்கு இந்த விஷயம் குறித்துத் தெரிய வேண்டும் என்று நினைத்தோம். இதன் மூலம் இந்தப் பொருட்களை வாங்கி பயன்படுத்தலாமா என்பது குறித்து மக்கள் முடிவெடுக்க முடியும்” என்று விளக்குகிறார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.