Read in English
This Article is From Jul 24, 2018

கருப்பை புற்றுநோய்: அறிகுறிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது

Advertisement
Health

யூட்ரஸ் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோய் என்பது கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியைக் குறிக்கிறது, இதன் விளைவாகக் கருப்பை புற்றுநோய் உருவாகிறது. கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். கருப்பை புற்றுநோய் இருந்தால் பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அசாதாரண எடை இழப்பும் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறி.

இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர முடியும். ஆனால் பெரும்பாலும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் தாக்குகிறது. வல்லுநர்கள் இந்த நோய்க்கான சரியான காரணங்களை இன்னும் அறியவில்லை.

Advertisement

கருப்பை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்.

1. அசாதாரண ரத்தப்போக்கு

Advertisement

கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.

2. சிறுநீர் கழிப்பதில் சிரமம்

Advertisement

சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.

3. உடலுறவின்போது வலி

Advertisement

பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.

Advertisement