பிரஷாந்த் சவுத்திரியின் மீது துறைசார் விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
Lucknow: கடந்த வாரம் சனிக்கிழமையன்று ஆப்பிள் நிர்வாக அதிகாரி விவேக் திவாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை துப்பாக்கியால் சுட்ட காவலர் பிரசாந்த் சவுத்ரியுடன் உடன் இருந்த உத்தரபிரதேச காவலர் வியாழனன்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
மேலும் அவர் தனது மேலதிகாரிகள் பிரசாந்த் சவுத்திரியின் மீது பொய்யான குற்றத்தை சுமத்தியுள்ளார்கள் என்ற வீடியோ தகவலையும் வெளியிட்டுள்ளார்.
பிரசாந்த் சவுத்ரியின் மீது லக்னோ போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான துறைசார் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் பேசுகையில், மூத்த போலீஸ் அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாதென்றும், ஈடுபட்டால் அவர்களுடைய வேலை பறிபோகும் என்றும் எச்சரித்துள்ளனர் என்று கூறினார்.