Ayodhya verdict: பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக லக்னோ மற்றும் அயோத்தியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
Lucknow: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக லக்னோ மற்றும் அயோத்தியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
அவசர காலங்களில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு பின்னர், ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு நிலமையை முதலமைச்சர் மதிப்பாய்வு செய்து இயல்பு நிலையை உறுதிபடுத்த தேவையான வழிமுறைகளை வழங்கினார். லக்னோவில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி கட்டுப்பாடு அறை இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்குக்கு இடையூறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.
அயோத்தி நில விவகாரம் தொடர்பான தீர்ப்பு நீதிமன்றம் நவம்பர் 17க்கு முன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.