AMU Protest: ஜனவரி 5-வரை பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Lucknow: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அலிகர் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஜனவரி 5-வரை பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் அலிகர் பல்கலைக்கழகத்தின் முன்பு மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்போராட்டம் வன்முறையில் முடிந்தது. நாங்கள் இன்று அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்புவோம் என்று உத்தர பிரதேச காவல்துறை இயக்குநர் ஓ.பி. சிங் கூறினார்.
மாணவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்றும் கூறினார்
இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 10 காவல்துறையினரும் சுமார் 30 மாணவர்களும் காயமடைந்தனர். மாணவர்களை விடுதிகளை விட்டு காலி செய்து வீட்டிற்கு செல்லுமாறு கோரியுள்ளது.
வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் நாங்கள் அடையாளம் கண்டு செயல்படுவோம் சுமார் 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)