This Article is From Mar 16, 2020

ஓட்டுநர் சிறுநீர் கழிக்கச் சென்ற கேப்பில்.. BMW காரை திருடிச்சென்ற கும்பல்!

பங்கு தரகரான ரிஷாப் அரோரா சனிக்கிழமையன்று இரவில் ஒரு விருந்துக்குச் சென்று விட்டு மதுபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.

ஓட்டுநர் சிறுநீர் கழிக்கச் சென்ற கேப்பில்.. BMW காரை திருடிச்சென்ற கும்பல்!

ரிஷாப் தனது உறவினரின் பிஎம்டபிள்யூ காரை சில நாட்களாக பயன்படுத்தி வந்துள்ளார். (Representational)

ஹைலைட்ஸ்

  • BMW காரை திருடிச்சென்ற மர்ம கும்பல்!
  • ஓட்டுநர் மதுபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.
  • கார் உரிமையாளருக்கு தெரிந்தவர்களே செய்திருக்க முடியும் என போலீஸ் சந்தேகம்
Noida:

சிறுநீர் கழிப்பதற்காகச் சாலையோரம் நிறுத்திய பிம்டபிள்யூ காரை மர்ம கும்பல் திருடிச்சென்றதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஹரிஷ் சந்தர் கூறும்போது, பங்கு தரகரான ரிஷாப் அரோரா சனிக்கிழமையன்று இரவில் ஒரு விருந்துக்குச் சென்று விட்டு மதுபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது பேஸ் 2 காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்க அரோரா சென்றுள்ளார். 

அந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரானது, அரோராவின் உறவினருக்குச் சொந்தமானதாகும். இன்னும் அந்த காரின் பேரில் ரூ.40 லட்சம் கடன் தொகை பாக்கி செலுத்த வேண்டியதுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, திருடுச்சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்றனர். காரை சிறுநீர் கழிப்பதற்காகச் சாலையோரம் நிறுத்திய சமயத்தில் மர்ம நபர்கள் லாவகமாகத் திருடிச்சென்றுள்ளனர். 

இந்த திருட்டுச் சம்பவத்தைக் கட்டாயமாக கார் உரிமையாளருக்குத் தெரிந்தவர்களே செய்திருக்க முடியும் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் காரை மீட்டுவிடுவோம் என்று அவர் கூறியுள்ளார். 

தொடர்ந்து, போலீசாரிடம் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய அரோரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், முதலில் திருடப்பட்ட காரை மீட்பதும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதுபோன்று நகரச் சாலையில் கார் திருடப்படுவது என்பது மிக முக்கியமான பிரச்சினையாகும் என்று அவர் கூறியுள்ளார். 

இதனிடையே, அரோரா அளித்துள்ள புகாரில் அவரை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் பின்னால் இருந்து மிரட்டியதாவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், அது உண்மையா என்பது விசாரிக்கப்படவில்லை, ஏனெனில் அரோரா அப்போது மது போதையிலிருந்துள்ளார். 

அரோரா தனது உறவினரின் காரை கடந்த ஏழு நாட்களாகப் பயன்படுத்தி வந்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

.