Pilibhit, Uttar Pradesh: கிராமவாசிகள் புலியை அது இறக்கும் வரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
Lukcnow: உத்திர பிரதேசத்தின் பிலிபிட் என்ற மாவட்டத்தில் புலி ஒன்றினை கிராம மக்கள் அடித்துக் கொல்லும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ள்ளது.
இந்த கிராமம் தலைநகரம் லக்னோவிலிருந்து 240 கி.மீ தூரத்தில் உள்ள பிலிபிட் புலி காப்பகத்திற்கு அருகில் உள்ளது. புதன் கிழமை பிற்பகல் மாடெய்னா கிராமத்தத்தில் வசிக்கும் கிராம வாசிகள் புலிகளை அடித்து கொல்லும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் கிராமவாசியைத் தாக்கி காயப்படுத்தியதால் ஊர் மக்கள் புலியை அடித்துக் கொன்றுள்ளனர்.
புலிக்கு 6 வயது ஆகியுள்ளது. விலா எலும்புகள் மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்களால் இறந்து விட்டது. உடற்கூறாய்வுக்கு பின் புலி தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட 31 கிராமவாசிகள் மீது உள்ளூர் வன அதிகாரிகள் எஃப் ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
தாக்குதல் நடந்த உடனே சம்பவ இடத்திற்கு வனத்துறை குழு வந்துள்ளது. ஆனால் கோபமடைந்த கிராமவாசிகள் புலியை அது இறக்கும் வரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
“வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. ஆனால் அந்த நேரத்தில் புலி மிகவும் வலியுடன் இருந்தது. அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்திருந்தால் கூட அது ஆபத்தாக முடிந்திருக்கலாம்.” என்று மாஜிஸ்திரேட் வைபவ் ஶ்ரீவாஸ்தவா கூறினார்.
காயமடைந்த புலிகளின் உயிரைக் காப்பாற்ற வன அதிகாரிகள் உண்மையாக முயன்றனரா என்பதையும் மாஜிஸ்திரேட் விசாரணை ஆராயும்.
பிலிபிட் மாவட்டம் மற்றூம் பிலிபிட் புலிகள் காப்பகத்தில் 2012 முதல் 16 புலிகள் மற்றும் 3 சிறுத்தைகள் கொல்லப்பட்டதாக ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.
கிராமவாசிகள் புலியை அடித்துக் கொன்றது இங்கு நடந்த முதல் சம்பவமாகும்.