செளரி - செளரா காவல் நிலையத்தில் நடந்தது.
Gorakhpur: உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் காவல் நிலையத்தின் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த அரவிந்த் யாதவ் தனது மகன் விகாஸ் (18) என்பவரை காவல் நிலையத்திலேயே வியாழக்கிழமை சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக துணை ஆய்வாளர் சுமித் சுக்லா கூறுகையில், தலைமைக் காவலர் அரவிந்த் யாதவ், சமீபத்தில் செளரி - செளரா காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது முதல் மனைவியின் மகன் விகாஸ், வியாழக்கிழமை காலை சந்தித்துள்ளார்.
அப்போது அவர்கள் இருவரும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அச்சமயம் காவலர் அரவிந்த், தன்னிடம் இருந்த போலீஸ் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவரது மகனை சுட்டார்.
இதில் விகாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது தலைமைக் காவலர் அரவிந்த் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.