Read in English
This Article is From Oct 18, 2019

உ.பியில் குடியிருப்போர் செல்ஃபி எடுத்து அனுப்பினால்; இலவச கழிப்பறை கட்டித் தரப்படும்

Uttar Pradeesh, Sambhal: அனைத்து செல்ஃபிகளும் அடையாளம் காணப்பட்டு தனிப்பட்ட கழிப்பறைகளை கட்ட முடியாதவர்களுக்கு ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் வழங்கப்படும் என்று தீபேந்திர யாதவ் கூறியுள்ளார்.

Advertisement
நகரங்கள்

ஸ்வச் பாரத் மிஷன் என்பது 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மத்திய அரசின் முதன்மை துப்புரவுத் திட்டமாகும்

Sambhal:

உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டில் கழிப்பறை இல்லாதவர்கள் செல்ஃபி ஒன்றை எடுத்து மாவட்டத்தின் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு அனுப்புமாறு துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றில்,  சம்பாலின் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் தீபேந்திர யாதவ், குடியிருப்பாளர்கள் தங்கள் செல்ஃபிகளை மாவட்ட பஞ்சாயத்து அதிகாரி, நிர்வாக அதிகாரி, மாநகராட்சி மற்றும் தொகுதி மேம்பாட்டு அலுவலர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். 

அனைத்து செல்ஃபிகளும் அடையாளம் காணப்பட்டு தனிப்பட்ட கழிப்பறைகளை கட்ட முடியாதவர்களுக்கு ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் வழங்கப்படும் என்று தீபேந்திர யாதவ் கூறியுள்ளார். 

ஸ்வச் பாரத் மிஷன் என்பது 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மத்திய அரசின் முதன்மை துப்புரவுத் திட்டமாகும். பிரதமர் மோடி 2014இல் முதன்முதலில் பதவியேற்றபோது தனது “அனைவருக்கும் கழிவறைகள்” என்ற வாக்குறுதியினை அளித்தார். 

Advertisement

அக்டோபர் 2, 2014 அன்று 38.7 சதவீதமாக இருந்த நாட்டின் துப்புரவு பாதுகாப்பு 98 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

Advertisement
Advertisement