This Article is From May 07, 2019

உயர் சாதியினர் முன்பு அமர்ந்து சாப்பிட்ட தலித் இளைஞன் அடித்துக் கொலை

இந்த சம்பவம் தெஹ்ரி மாவட்டத்தின் ஸ்ரீகாட் கிராமத்தில் ஏப்ரல் 26 அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்  நடந்தது. ஒன்பது நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது.

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ப்பட்டுள்ளது.

New Tehri:

உத்தரகாண்டில் ஞாயிறு அன்று தலீத் இளைஞர் இறப்பிற்கு காரணமாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமண விழாவில் உட்கார்ந்து சாப்பிடுவது குறித்து எழுந்த பிரச்னையில் 7 பேர் கொண்ட ஒரு குழு இளைஞனை அடித்துக் கொன்றுள்ளது.

“ஏழு பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று மூத்த சட்டம் மற்றும் ஒழுங்கு அதிகாரி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

”ஜிடேந்திரா ஒரு தலீத் சமூகத்தைச் சார்ந்தவர். மேல் சாதி ஆண்கள் குழு தங்கள் முன்னால் கீழ்சாதி இளைஞன் அமர்ந்து சாப்பிடுவதைக் கண்டு கோபமடைந்து ஜிடேந்திராவை தாக்கியுள்ளனர்” என்று காவல்துறை அதிகாரி உத்தம் சிங் ஜிம்வால் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.

இந்த சம்பவம் தெஹ்ரி மாவட்டத்தின் ஸ்ரீகாட் கிராமத்தில் ஏப்ரல் 26 அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்  நடந்தது. ஒன்பது நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது.

ஜிடேந்திராவின் சகோதரி வழக்கு பதிவு செய்துள்ளார். கஜேந்திர சிங், சோபன் சிங், குஷால் சிங், கம்பர் சிங், காம்பீர் சிங், ஹர்பீர் சிங், மற்றும் குகும் சிங் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

(With inputs from PTI, ANI)

.