This Article is From Dec 29, 2018

பாபா ராம் தேவுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம், ‘யோகா குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான நிறுவனம், உள்ளூர் மக்களுடன் லாபத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்று சிறப்புத் தீர்ப்பு அளித்துள்ளது.

பாபா ராம் தேவுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!

உத்தரகாண்டில் பாபா ராம்தேவுக்குச் சொந்தமான திவ்யா ஃபார்மசி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Nainital, Uttarakhand:

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம், ‘யோகா குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான நிறுவனம், உள்ளூர் மக்களுடன் லாபத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்று சிறப்புத் தீர்ப்பு அளித்துள்ளது.

உத்தரகாண்டில் பாபா ராம்தேவுக்குச் சொந்தமான திவ்யா ஃபார்மசி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் மாநிலத்தில் இருக்கும் ஆயுர்வேத மூலப் பொருட்களை வைத்தே பொருட்களை தயாரித்து வருகிறது. 

இதையொட்டி, உத்தரகாண்ட் பயோ போர்டு, ‘பல்லுயிர் பெருக்க சட்டம், 2002-ன் கீழ், திவ்யா ஃபார்மசி நிறுவனம் தனது லாபமான 421 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயை உள்ளூர் மக்களுடனும் விவசாயிகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்று நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்த திவ்யா ஃபார்மசி நிறுவனம், உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில்தான், பயோ போர்டுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம். 

தீர்ப்பில் நீதிமன்றம், ‘உத்தரகாண்ட் பயோ போர்டுக்கு, திவ்யா ஃபார்மசியை லாபத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முழு உரிமையும் உள்ளது. இயற்கை வளங்கள் என்பது தேசிய சொத்து மட்டுமல்ல. அது, எங்கிருந்து எடுக்கப்படுகிறதோ அங்கு வாழும் மக்களுக்கும் சொந்தமானதுதான்' என்று குறிப்பிட்டுள்ளது. 



 

.