போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Unnao: உத்தர பிரதேசத்தில் 11 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு செங்கலால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
உன்னாவோ மாவட்டத்தின் சபிபூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை கடத்திச் சென்று குற்றவாளிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. பின்னர் அவர் செங்கலால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
விட்டின் அருகேயுள்ள வயல் ஒன்றில் சிறுமியின் உடல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.