Read in English
This Article is From Aug 02, 2019

வெள்ளப் பெருக்கில் 2 வயது குழந்தையை தலையில் வைத்து காப்பாற்றிய காவல்துறை அதிகாரி

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அறிந்ததும், காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது.

Advertisement
இந்தியா Edited by

ஒரு பெண் குழந்தையும் அவரது தாயும் வெள்ளத்தில் மூழ்குவதை அறிந்தோம்.

Highlights

  • Sub-inspector Govind Chavda rescued the girl from Devipura locality
  • He said he carried the baby girl through five feet-deep water for 1.5 km
  • Vadodara has received an unprecedented 499 mm of rain in 24 hours
Vadodara:

மத்திய குஜராத்தில் வதேதராவில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் இரண்டு வயது குழந்தையை தலையில் சுமந்து உயிரைக் காப்பாற்றினார்.

விஷ்வாமித்ரி ரயில் நிலையம் அருகே தேவிபுரா வட்டாரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையை சப் இன்ஸ்பெக்டர் சவ்தா மீட்டார். 

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அறிந்ததும், காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது. 

நானும் எங்கள் அணியின் மற்ற உறுப்பினர்களும் தேவிபுராவை அடைய வெள்ளம் சூழ்ந்த சாலைகள் வழியாக நடக்க வேண்டியிருந்தது. நாங்கள் ஒரு கம்பத்தில் கயிற்றைக் கட்டி இதனால் தன்ணீர் கழுத்து அளவு ஆழமாக இருப்பதால் மக்கள் அதை பிடித்துக் கொண்டு நகர முடியும்” என்று அவர் கூறினார்.

Advertisement

“ஒரு பெண் குழந்தையும் அவரது தாயும் வெள்ளத்தில் மூழ்குவதை அறிந்தோம். அந்தக் குழந்தையை பிளாஸ்டிக் டப்பில் வைத்து தலையில் தூக்கி வைத்து குழந்தையை காப்பாற்றினோம். வெள்ளப்பெருக்கு காரணமாக  தோளில் தூக்கி வைத்து கொண்டு செல்ல முடியாது. சுமார் 1.5 கி.மீ தூரம் நடந்து சென்று பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றோம். குழந்தையின் தாயையும் காப்பாற்றி விட்டோம்” என்று அவர் கூறினார்.

காலை 8 மணிவரை 24 மணிநேரம் பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 499 மி.மீ மழை பெய்தது.

Advertisement
Advertisement