This Article is From Nov 26, 2019

சட்ட சாசனத்தைத் தமிழில் முழங்கிய Vaiko… நாடாளுமன்றத்தில் ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சிகள்!

அவரைத் தொடர்ந்து மதுரை எம்.பி., சு.வெங்கடேசனும், அரசியலமைப்பின் முன் வரைவை தமிழில் வாசித்தார்.

Advertisement
இந்தியா Written by

எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்துக்கு வெளியே, மகாராஷ்டிர பாஜக அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தன

இன்று இந்திய அளவில் ‘அரசியலமைப்பு தினம்' (Constitution Day) கொண்டாடப்படுகிறது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில், நாட்டின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் (BR Ambedkar) கடும் உழைப்பினால் உருவான இந்திய அரசியலமைப்புச் சட்டம், அமலுக்கு வந்தது. அதைப் போற்றும் வகையில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. 

இப்படி பிரதமர் மோடி, நாடாளுமன்றத்துக்கு உள்ளே உரையாற்றிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்துக்கு வெளியே, மகாராஷ்டிர பாஜக அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தன. 

இதில் தமிழக எம்.பி-க்களும் கலந்து கொண்டனர். அப்போது அனைவருக்கும் மத்தியில் மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ, “நாம் இந்திய மக்கள், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துள் சமய சார்பற்ற ஜனநாயகக் குடியரசாகக் கட்டமைத்திட மற்றும் எல்லா குடிமக்களுக்கும் சமூக பொருளாதார மற்றும் அரசியல் நீதி, எண்ணம், கருத்து, நம்பிக்கை, வழிபாடுவதற்கான உரிமை, செயலுரிமை, படிநிலை மற்றும் சமத்துவம் ஆகியன உறுதி செய்திட மற்றும் தனிநபர் ஒற்றுமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் உறுதிபடுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்பு உணர்வை ஊக்குவித்திட, 1949, நவம்பர் 26 ஆம் தேதி, நம்முடைய அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு முறையை இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்குத் தருகிறோம்,” என்று அரசியலமைப்புச் சட்ட சாசனத்தின் முன் வரைவை வாசித்தார். 

Advertisement

அவரைத் தொடர்ந்து மதுரை எம்.பி., சு.வெங்கடேசனும், அரசியலமைப்பின் முன் வரைவை தமிழில் வாசித்தார். இப்படி பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பின் முன் வரைவை வாசித்து, மகாராஷ்டிராவில் பாஜக-வின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  

Advertisement