This Article is From Dec 16, 2019

“இது குடியுரிமைச் சட்டமா… இல்லை, குடி கெடுக்கிற சட்டம்…”- Vaiko காட்டம்!

Vaiko on Citizenship Act -'ஜனநாயக விரோதமான இந்த குடியுரிமை மசோதா வங்கக் கடலில் தூக்கியெறியப்பட வேண்டும்'

Advertisement
தமிழ்நாடு Written by

Vaiko on Citizenship Act - “சட்ட சாசனத்திற்கு எதிரான, மன்னிக்க முடியாத, நீதியற்றது குடியுரிமை திருத்த மசோதா"

Vaiko on Citizenship Act - குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில், நேற்று டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களுக்கும் போலீஸுக்கும் இடையில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக, மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் டெல்லியில் நேற்றிரவு முதல் மிகவும் பதற்றமான சூழல் காணப்படுகிறது. 

முன்னதகா குடியுரிமை மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆன போது, அதற்கு எதிராக பேசிய வைகோ, “சட்ட சாசனத்திற்கு எதிரான, மன்னிக்க முடியாத, நீதியற்றது குடியுரிமை திருத்த மசோதா. இந்த மசோதாவுக்கு 1000-க்கும் அதிகமான விஞ்ஞானிகள் கடுமையான எதிர்ப்பை மத்திய அரசிடம் பதிவு செய்துள்ளனர். இருந்தும் அதற்கு சற்றும் அசைந்து கொடுக்கவில்லை அரசு. பாகிஸ்தான், அப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருக்கும் முஸ்லிம் அல்லாத மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வழிவகை செய்கிறது இந்த மசோதா. இதில் மியான்மரில் கொன்று குவிக்கப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள், இலங்கையில் இனப் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும் இடமில்லை. அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு பாகுபாடு பார்த்துள்ளது மத்திய அரசு. குறிப்பிட்ட மூன்று நாட்டு முஸ்லிம்களையும் விலக்கி வைத்துள்ளது அரசு.

இலங்கையில் இனப் படுகொலை செய்யப்படுவதால் அஞ்சி, கடந்த 30, 40 ஆண்டுகளாக இந்தியாவில் தஞ்சமடைந்த ஈழத் தமிழர்களின் உரிமை பற்றி இந்த மசோதா ஒன்றும் பேசவில்லை. மாறாக, இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் இப்போது ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், அவர்களுடன் கை குலுக்குகிறது இந்திய அரசு. ஜனநாயக விரோதமான இந்த மசோதா வங்கக் கடலில் தூக்கியெறியப்பட வேண்டும்,” என்று கொந்தளித்தார்.

Advertisement

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி வைகோ, “இது குடியுரிமைச் சட்டமா… இல்லவே இல்லை, இது குடியைக் கெடுக்கிற சட்டம். நாடாளுமன்றத்திலேயே இது குறித்துப் பேசும்போது, வங்கக் கடலில் அது தூக்கியெறியப்பட வேண்டும் என்று பேசினேன். அதற்குக் காரணம், ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் ரத்தம் வங்கக் கடலில்தான் கலந்துள்ளது,” என்றார். 

Advertisement