This Article is From Feb 18, 2019

இந்தியாவின் அதிவேக ரயில் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’-க்கு வந்த சோதனை..!

தொடங்கப்பட்ட 3 நாட்களில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், 7000 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளது. 

இந்தியாவின் அதிவேக ரயில் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’-க்கு வந்த சோதனை..!

சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி, இந்த ரயிலை புது டெல்லியிலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

New Delhi:

இந்தியாவின் அதிவேக ரயில் என்று அழைக்கப்படும், ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்', பொதுப் பயன்பாட்டுக்கு வந்த சில நாட்களிலேயே அதிக விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. 

சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி, இந்த ரயிலை புது டெல்லியிலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஆனால், தனது முதல் பயணத்திலேயே பழுது ஏற்பட்டு, நடு வழியில் நின்றது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். அதற்கு ரயில்வே தரப்பு, ‘சில கால்நடைகளை ரயில் மோதியதால், நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது' என்று கூறப்பட்டது. 

இந்நிலையில், நேற்று வாரணாசிக்கு, இந்த ரயில் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் தாமதாக சென்றுள்ளது. இதற்கு, மிக அதிகமாக இருந்த பனி மூட்டம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. காய்சாபாத்- துண்ட்லா பகுதிக்கு இடையில்தான் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும், ரயிலில் இருந்த பயணிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு, 60 கிலோ மீட்டர் என்ற குறைவான வேகத்தில் ரயில் செலுத்தப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய மொத்த பயணத்தின்போதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சராசரியாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. ரயில் அதிகபட்சமாக, 180 கிலோ மீட்டர் வரை வேகமெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வட இந்தியாவில் அதிக பனிப் பொழிவு இருப்பதனால், ரயில் மெதுவாக செல்வது சாதாரணம்தான் என்று கூறப்படுகிறது. 

தொடங்கப்பட்ட 3 நாட்களில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், 7000 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளது. 
 

.