This Article is From May 12, 2020

கொரோனா வைரஸ் தாக்குதலால் இங்கிலாந்தில் சிக்கித் தவித்த 331 இந்தியர்கள் மீட்பு!

தற்போது வரையில் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்குரிக்கா, இங்கிலாந்து, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் வந்துள்ளன. 

கொரோனா வைரஸ் தாக்குதலால் இங்கிலாந்தில் சிக்கித் தவித்த 331 இந்தியர்கள் மீட்பு!

விமானப் பயணிகள் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • இங்கிலாந்தில் இருந்து 331 இந்தியர்கள் ஐதராபாத் மீட்டு வரப்பட்டுள்ளனர்
  • ஐதராபாத்திற்கு சுமார் 750 இந்திய பயணிகள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள்
  • பயணிகள் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
Hyderabad:

வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு இங்கிலாந்தில் இருந்து 331 இந்தியர்களை மீட்டு ஐதராபாத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து 331 இந்தியர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 773 விமானம், ஐதராபாத்தில் அதிகாலை 2.21-க்கு தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐதராபாத்தை தொடர்ந்து 87 பயணிகளை ஏற்றிக்கொண்டு டெ ல்லி வழியாக போயிங் விமானம் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றது.

இங்கிலாந்தில் இருந்து வந்த இந்தியர்கள் அனைவரும், விமானத் தளம் முதல் வரவேற்பு அறை வரையில் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஒட்டுமொத்த விமான நிலையம் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 

விமானம் ஐதராபாத்தில் தரையிறங்கியதும், பயணிகள் அனைவரும் 20-25 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். 

முதலில் அவர்களுக்கு வெப்பநிலைமானி மூலம் சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் பாஸ்போர்ட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுகாதார சோதனைகள் முடிந்த பின்னர், தனிமனிதர் பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்த துணை ராணுவத்தினர் பயணிகளை குடியேறுதல் தொடர்பான ஒப்புதலைப் பெற அழைத்துச் சென்றனர். 

தற்போது வரையில் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்குரிக்கா, இங்கிலாந்து, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் வந்துள்ளன. 

இந்த விமானங்களில் வந்திறங்கிய சுமார் 750 இந்தியர்கள், தெலங்கானா அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல்வேறு தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.