This Article is From Jun 10, 2020

வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க கூடுதலாக 58 விமானங்கள் அறிவிப்பு!

வந்தே பாரத் திட்டம் ஒவ்வொரு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3-வது கட்டமாக ஜூன் 11-ம்தேதி தொடங்கி ஜூன் 30 வரையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

Advertisement
இந்தியா

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் மூலமாக சுமார் 70 ஆயிரம் இந்தியர்கள் தாய் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

Highlights

  • வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாடுகளிலிருந்து இந்தியர்கள் மீட்பு
  • வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க கூடுதலாக 58 விமானங்கள்
  • விமானங்கள் மூலம் 70 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
New Delhi:

வளைகுடா நாடுகளில் கொரோனா பாதிப்பு, பொது முடக்கம் காரணமாக தவித்து வரும் இந்தியர்களை மீட்பதற்காக 58 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக வளை குடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்காக 58 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ட்விட்டர் கூறியிருப்பதாவது-

Advertisement

வளைகுடா நாடுகளில் கொரோனா – பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்பதற்காக இன்றிலிருந்து ஜூன் 30-ம் தேதி வரையில் 58 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படும். ஏற்கனவே இந்த பணிக்காக 107 விமானங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 165 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் மூலமாக சுமார் 70 ஆயிரம் இந்தியர்கள் தாய் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

Advertisement

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

வந்தே பாரத் திட்டம் ஒவ்வொரு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3-வது கட்டமாக ஜூன் 11-ம்தேதி தொடங்கி ஜூன் 30 வரையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

Advertisement