Kolhapur floods: கோலாப்பூருக்கு பொருட்களை கொண்டு வரும் லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்கள் 30 முதல் 40 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஹைலைட்ஸ்
- பஞ்ச்கங்கா நதியினால் நகரமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
- லாரிகள்,பிற கனரக வாகனங்கள் 30 முதல் 40 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன
- நீரின் அளவு குறைவதற்கு 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்
New Delhi: மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேற்கூரையும் மரங்களும் மட்டுமே காணக்கிடைக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் ஆயிரக்கணக்கானோர் வீடுகளும் சேதமடைந்துள்ளன.
கோலாப்பூர் நகரத்துக்கான சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. கோலாபூருக்கு வெளியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து பார்க்கும் போது ஒவ்வொரு கட்டிடம் 10 அடி ஆழமான நீரில் மூழ்கி இருந்தன. அவற்றின் கூறைகள் மட்டும் தெரிகின்றன.
பஞ்ச்கங்கா நதியினால் நகரமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. டிராபிக் சிக்னல்கள் உடைந்து கிடக்கின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் கடுமையாக பாதிப்பை அடைந்துள்ளன.
கோலாப்பூருக்கு பொருட்களை கொண்டு வரும் லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்கள் 30 முதல் 40 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் குறைவாகவே உள்ளன.
ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.ஆயிரக்கணக்கானோர் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினால் வெளியேற்றப்பட்டனர். 3,800 க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.
நீரின் அளவு குறைவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். அடுத்த 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்யும் என்ற கணிப்புகள் கூடுதல் சேதத்தை உருவாக்கும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளன.
மகாராஷ்டிரா முழுவதும் வெள்ளதில் மூழ்கிய நகரங்களில் இருந்து இரண்டு லட்சத்திற்உம் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு முயற்சிகளுக்காக கடற்படையினரும் கயிறு கட்டியுள்ளனர். கடற்படையில் உள்ள நூற்றுக்கணக்கான வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதிகாரப்பூர்வமாக மேற்கு மகாராஷ்டிராவின் ஐந்து மாவட்டங்களில் 27 பேர் இறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
சாங்லி மற்றும் கோலாப்பூரில் நடந்த வான்வழி ஆய்வில் முதலமைச்சார் தேவேந்திர ஃபட்னாவிஸ் சேதத்தை ஆய்வு செய்தார். வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும். சுமார் 38,000 பேர் கோலாப்பூரில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும் பட்னாவிஸ் கூறினார்.