This Article is From May 13, 2020

பொருட்களை தூக்கியெறிந்து கடைகளை அப்புறப்படுத்திய வாணியம்பாடி ஆணையர்; பாயும் நடவடிக்கை!

வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடத்தில் போடப்பட்டுள்ள சாலையோரக் கடைகள் மற்றும் தள்ளுவண்டிக் கடைகளை...

பொருட்களை தூக்கியெறிந்து கடைகளை அப்புறப்படுத்திய வாணியம்பாடி ஆணையர்; பாயும் நடவடிக்கை!

இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

ஹைலைட்ஸ்

  • வீடியோவில் ஆணையர், கடையின் பொருட்களை தூக்கியெறிகிறார்
  • தள்ளுவண்டிக் கடைகளை குப்புறக் கவிழ்த்து விடுகிறார்
  • திமுக எம்பி கனிமொழியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், பொது இடங்களில் கடைகளைத் திறப்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் சில கடைகள் மீது, அரசு சார்பில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடத்தில் போடப்பட்டுள்ள சாலையோரக் கடைகள் மற்றும் தள்ளுவண்டிக் கடைகளை அடாவடித் தனமாக அப்புறப்படுத்தி உள்ளார். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

இது குறித்துப் பலர் புகார் தெரிவிக்கவே, திருப்பத்தூரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி விஜயக்குமார், “வாணியம்பாடி முனிசிபாலிட்டி கமிஷனரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மிகவும் ஒழுக்கமான மற்றும் நேர்மையான அதிகாரி. கோவிட்-19 பரவல் தடுப்புக்காக தன் வாழ்க்கையை முன்வைத்துப் போராடி வருகிறார். இந்த வீடியோவில் நான் பார்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எப்படி இருந்தாலும் அனைத்து வீதி மீறல்களுக்கும் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் பற்றி திமுகவின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி, “வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற  செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார். 

.