This Article is From Jun 20, 2018

ஆசிட் கசிவு : சரி செய்ய மின்சார இணைப்பு கேட்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்

தீப்பற்ற கூடிய ரசாயண கிடங்குகளும், பொருட்களும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் பிற பகுதிகளில் உள்ளது

ஆசிட் கசிவு : சரி செய்ய மின்சார இணைப்பு கேட்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்

ஹைலைட்ஸ்

  • சல்ஃபியூரிக் ஆசிட் கசிவு ஏற்பட்டுள்ளது
  • சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் என வேதாந்தா எச்சரிக்கை
  • கசிவை சரி செய்ய மின்சார இணைப்பு கேட்கிறது வேதாந்தா
Tuticorin, Tamil Nadu: தூத்துகுடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் அலையில் இருந்து சல்ஃபியூரிக்ஆசிட் கசிவதால், தீவிர சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக் கூடம் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் கசிவுனால், பெரிய பாதிப்புகள் இல்லை என கடந்த ஞாயிற்றுகிழமை அன்று, தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். பாதிப்புகளை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

“ஆசிட் சேமிப்பு கிடங்கை சுற்றி கசிவு ஏற்பட்டுள்ளது. குழாய்களில் ஆசிட் கிடங்கிள் மூழ்கியுள்ளன.” என ஸ்டெர்லைட் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கசிவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு மின்சார இணைப்பை திரும்பத் தருமாறும் ஸ்டெர்லைட் நிறுவனம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், சுற்றுப்புற சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது.

“தீப்பற்ற கூடிய ரசாயண கிடங்குகளும், பொருட்களும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் பிற பகுதிகளில் உள்ளது. எனவே தற்போது ஏற்பட்டிருக்கும் கசிவினால் பாதிப்புகள் அதிகம் இருக்கும்” என குறிப்பிட்டுள்ளது

எனினும், ஸ்டெர்லைட் காப்பரில் ஏற்பட்டுள்ள கசிவினால் பெரிய பாதிப்புகள் இல்லை என தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி  தெரிவித்துள்ளார்.

“ஸ்டெர்லைட் காப்பரின் நிலைபாடு அது, அரசின் நிலைப்பாட்டை பொறுத்த வரை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றர் மாவட்ட ஆட்சியர்.

ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தால், தமிழக அரசு ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது, மேலும் ஆலைக்கு செல்லும் மின் இணைப்பையும் துண்டித்துள்ளது. மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது..
.