Read in English
This Article is From Jan 14, 2020

Australia காட்டுத்தீக்கு எஞ்சிய விலங்குகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்படும் உணவு

Operation Rock Wallaby: இந்த நடவடிக்கை மூலம் விலங்குகளின் தொகையை பராமரிப்பதற்கும் விலங்குகளின் உணவு நுகர்வை கண்காணிக்க அரசு கேமராக்களையும் நிறுவியுள்ளது.

Advertisement
விசித்திரம் Edited by

இரண்டு டன் கேரட் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்களை வெவ்வேறு தளங்களில் இறக்கி வைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் 2019 செப்டம்பர் மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயினால் மிஞ்சிய விலங்குகள் பட்டினியால் வாடுகின்றன. அவைகளுக்கு டன் கணக்கில் உணவை ஹெலிகாப்டர் மூலம் கொடுத்து வருகின்றனர்.

நியூ சவுத் வேல்ஸ் அரசு கடந்த வாரம் ஹெலிகாப்டர்களைக் கொண்டு இரண்டு டன் கேரட் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்களை வெவ்வேறு தளங்களில் இறக்கி வைத்துள்ளது. 

விலங்குகள் வசிக்கும் குறைந்தது ஆறு வெவ்வேறு இடங்களில் காய்கறிகளை கொட்டியுள்ளது. 

மிஞ்சிய உயிரினங்களின் வாழ்வை மீட்டெடுக்க நாங்கள் பயன்படுத்துகிற முக்கிய உத்திகளில் ஒன்று உணவை வழங்குவது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மாட் கீன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த நடவடிக்கை மூலம் விலங்குகளின் தொகையை பராமரிப்பதற்கும் விலங்குகளின் உணவு நுகர்வை கண்காணிக்க அரசு கேமராக்களையும் நிறுவியுள்ளது. 
 

Advertisement

காட்டுத்தீயினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்ட போது பல முக்கியமான வாழ்விடங்கள் அழிக்கப்பட்டது தெரிய வந்தது. மிஞ்சிய விலங்கினங்கள் போதிய உணவின்றி பட்டினியில் தவித்து வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

Advertisement