This Article is From Dec 27, 2019

“அமித்ஷா கும்பலே… மோடி கும்பலே!”- CAA போராட்டத்தில் எச்சரித்த வேல் முருகன்!

CAA Protest - "இந்த நாட்டின் விடுதலைப் போரில் அனைத்துக் கட்டங்களிலும் முக்கிய பங்காற்றியவர்கள் இஸ்லாமியர்கள்"

“அமித்ஷா கும்பலே… மோடி கும்பலே!”- CAA போராட்டத்தில் எச்சரித்த வேல் முருகன்!

CAA Protest - “இந்த நாட்டின் அங்கமான இஸ்லாமிய மக்களையும், தொப்புல் கொடி உறவான ஈழத் தமிழர்களையும் பாகுபாடு காட்டிப் பிரித்து வைக்கும் சட்டத்தை அமல் செய்துள்ளது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பாஜக அரசு"

CAA Protest - குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், ஓவியர்கள், களச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் சென்னையில் தொடர் இசை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார். 

“இந்த நாட்டின் அங்கமான இஸ்லாமிய மக்களையும், தொப்புல் கொடி உறவான ஈழத் தமிழர்களையும் பாகுபாடு காட்டிப் பிரித்து வைக்கும் சட்டத்தை அமல் செய்துள்ளது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பாஜக அரசு. 

இந்த நாட்டின் விடுதலைப் போரில் அனைத்துக் கட்டங்களிலும் முக்கிய பங்காற்றியவர்கள் இஸ்லாமியர்கள். ஆனால், அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற இந்த பாசிச கும்பல் துடிக்கிறது. 

ஆனால் நீங்கள் கொண்டு வந்திருக்கும் குடியுரிமைச் சட்டம் பற்றியும் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றியும் இன்றை எழுத்தாளர்கள், கலைஞர்கள், இளைஞர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் சட்டத்தைப் பின் வாங்கும் வரையில் போராட்டத்தையும் யாரும் பின் வாங்கப் போவதில்லை.

அமித்ஷா கும்பலே… மோடி கும்பலே… நீங்கள் கொண்டு வந்துள்ள சட்டத்தை ஒன்று திரும்பிப் பெறுங்கள், அல்லது, திருத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்,” என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார் வேல் முருகன். 

இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக உரையாற்றினார்கள். 

.