இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் உரையின் போது வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.
தற்போது பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும் என அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களிடமிருந்து வந்த கோரிக்கையைப் பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக வேலூரைத் தலைமையாகக் கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப் பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமும் பிரிக்கப்படும். மேலும் வேலூரில் உள்ள கே.பி குப்பத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.