Lok Sabha Election: வேலூர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
Vellore Election Result 2019: வேலூர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு (Vellore Lok Sabha Constituency) கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 14,32,555 வாக்காளர்களில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை (Vote Counting) தொடங்கியுள்ளது. 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டுன.
அதைத்தொடர்ந்து, தற்போது மின்னனு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 6 அறைகளில் தலா 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது. மேலும் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், விவிபேட்டில் பதிவான வாக்குகளுக்கும் இடையில் வேறுபாடு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்படும். அதில் மாறுபாடு இருந்தால் விவிபேட்டில் பதிவான வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
வேலூர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதற்கான முன்னிலை நிலவரம் காலை 11 மணியளவில் தெரிந்துவிடும்.
வாக்கு எண்ணிக்கை குறித்த நேரடி தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள..