This Article is From Feb 18, 2019

தடை விதித்த அமெரிக்கா... அடுத்த டார்கெட் இந்தியா - வெனிசுவேலாவின் மாஸ்டர் ப்ளான்!

அமெரிக்கா தடைகளை விதித்ததையடுத்து, வெனிசுவேலாவின் நம்பர் 1 வணிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இந்தியா மாறியுள்ளது. பிப்ரவரியில் 6,20,000 பேரல்களை இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தடை விதித்த அமெரிக்கா... அடுத்த டார்கெட் இந்தியா - வெனிசுவேலாவின் மாஸ்டர் ப்ளான்!

வெனிசுவேலாவில் எண்ணெய் ஏற்றுமதி என்பது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தடைக்கு பின்பு தொய்வடைந்துள்ளது.

லத்தின் அமெரிக்க நாடான வெனிசுவேலா மீது கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா தடைகளை விதித்த பிறகு வெனிசுவேலாவின் எண்ணெய் வணிகம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. 

அமெரிக்கா தடைகளை விதித்ததையடுத்து, வெனிசுவேலாவின் நம்பர் 1 வணிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இந்தியா மாறியுள்ளது. பிப்ரவரியில் 6,20,000 பேரல்களை இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் நயரா எனர்ஜி நிறுவனங்களுக்கு ரொஸ்நெஃப்ட் நிறுவனம் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

வெனிசுவேலாவில் எண்ணெய் ஏற்றுமதி என்பது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தடைக்கு பின்பு தொய்வடைந்துள்ளது. தினசரி ஏற்றுமதியாகும் எண்ணெய்யின் அளவில் 9.2 சதவிகிதம் வீழ்ந்து 1.2 மில்லியன் பேரல்களாக ஏற்றுமதி குறைந்தது. ld12ih1s

 

வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களான வலேரோ எனர்ஜி மற்றும் செவ்ரோன் கார்ப்பரேஷன் ஆகியவை தடையை ஏற்று முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தன.

அதேசமயம் வெனிசுவேலாவின் நீண்டகால வர்த்தக நாடான சீனா கடந்த 12 ஆண்டுகளாக வெனிசுவேலாவிடம் 50 பில்லியன் டாலரை மீட்க முயற்சி செய்து வருகிறது. அதனால் இறக்குமதியை 50 சதவிகிதம் குறைத்துள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.