This Article is From Oct 21, 2018

பெல்ஜியம் சரவண பவனில் தோசை சாப்பிட்ட வெங்கையா நாயுடு!

பெல்ஜியத்தின் இந்திய தூதர் காயத்திரி இசார் குமார் உட்பட இந்திய பிரதிநிதிகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒன்றாக சந்தித்தார்

பெல்ஜியம் சரவண பவனில் தோசை சாப்பிட்ட வெங்கையா நாயுடு!

பெல்ஜியத்தின் பிரஸல்ஸில் உள்ள தென் இந்திய உணவகமான சரவண பவனில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உணவருந்தினார்.

Brussels, Belgium:

12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளின் மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் நேற்று, தென் இந்திய பிரபல உணவகமான சரவண பவனில் இரவு உணவு உட்கொண்டார்.

அங்கு பெல்ஜியத்தின் இந்திய தூதர் காயத்திரி இசார் குமார் உட்பட இந்திய பிரதிநிதிகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒன்றாக சந்தித்தார்.

இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது டிவிட்டர் பதிவில், பிரஸ்ஸல்ஸில், பெல்ஜியத்தின் இந்திய தூதர் காயத்திரி இசார் குமார் உட்பட இந்திய பிரதிநிதிகளுடன் இந்திய உணவகமான சரவண பவனில் உணவருந்தினோம் என குறிப்பிட்டுள்ளார்.
 

1981-ல் சென்னையில் நிறுவப்பட்ட சரவண பவன் உலகம் முழுவதும் கிளைகள் கொண்ட மிகப்பெரிய தென் இந்திய சைவ உணவகம் ஆகும். இந்தியாவில் 33 இடங்களிலும், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, வடஅமெரிக்கா உள்ளிட்ட 47 நாடுகளில் உணவகங்களை கொண்டுள்ளது சரவண பவன்.

முன்னதாக, நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆண்ட்வெர்ப் மாகாண மாளிகையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

12வது ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியபோது, பொருளாதார குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட உலக நாடுகளின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரினார்.

மேலும், அவர் பல்வேறு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வதற்காக உலகப் பிரமுகர்களுடன் பல கூட்டங்களை நடத்தியுள்ளார்.

.