বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 01, 2020

மிகவும் அரிய வகை ‘சிவப்பு பாம்பு’… வைரலாகும் புகைப்படம் - முழு விவரம் உள்ளே!

இந்த சிவப்பு நிறப் பாம்பு விஷமற்றது என்றும், பூச்சிகள் மற்றும் புழுக்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் உயிரினம் என்றும் சொல்லப்படுகிறது.

Advertisement
விசித்திரம் Edited by (with inputs from PTI)

ஆரஞ்சு நிறத்தில் இருப்பதாலும், நேபாளத்தின் ‘குக்ரி’ போல அது பற்கள் கொண்டுள்ளதாலும ‘சிவப்பு கோரல் குக்ரி’ என அழைக்கப்படுகிறதாம். 

மிகவும் அரிய வகை சிவப்பு பாம்பான ‘Coral Kukri' உத்தர பிரதேசத்தில் தென்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் துத்வா தேசியப் பூங்காவில் இந்தப் பாம்பு உலவும் போது படமெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘WildLense' என்னும் அமைப்பால் இந்தப் படம் தற்போது ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. 

துத்வா பகுதியில் இந்த சிவப்பு பாம்பு, கடந்த 1936 ஆம் ஆண்டு முதன்முறையாக பார்க்கப்பட்டுள்ளது. அதன் அறிவியல் பெயர் ‘oligodon Kheriensis' ஆகும். இந்தப் பாம்பைப் பொது இடங்களில் பார்ப்பது மிகவும் அரிதாகும். 82 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் இந்தப் பாம்பு முதன்முறையாக தென்பட்டது. இப்போது மீண்டும் இந்தப் பாம்பு பார்க்கப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து இந்திய வனத் துறையின் மூத்த அதிகாரி, ரமேஷ் பாண்டே, “கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் பாம்பு தென்படுவது இது நான்காவது முறைதான். இது இந்தப் பாம்பின் அதிகரிப்பை சுட்டிக்காட்டுகிறது” என்கிறார். 

Advertisement

WildLense அமைப்பு, “துத்வா தேசியப் பூங்கா பலதரப்பட்ட உயிரினங்களால் நிரம்பியவை. நம்மைத் தொடர்ந்து ஆச்சரியத்துக்கு உள்ளாக்குபவை. இன்று மழை பெய்த பிறகு, இந்தப் பாம்பைப் பார்த்தோம்” என சிவப்பு பாம்பு படத்துடன் பதிவிட்டுள்ளனர். 

இந்த அரிய வகை பாம்பின் படம், பல நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் போஸ்டுக்குக் கீழ், பாம்பைப் பற்றி வியந்து வியந்து கருத்திட்டு வருகின்றனர். பலரும், இந்தப் பாம்பு மிக அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  

வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த சிவப்பு நிறப் பாம்பு விஷமற்றது என்றும், பூச்சிகள் மற்றும் புழுக்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் உயிரினம் என்றும் சொல்லப்படுகிறது. ஆரஞ்சு நிறத்தில் இருப்பதாலும், நேபாளத்தின் ‘குக்ரி' போல அது பற்கள் கொண்டுள்ளதாலும் ‘சிவப்பு கோரல் குக்ரி' என அழைக்கப்படுகிறதாம். 

Advertisement