This Article is From Nov 03, 2018

தென்கொரிய அதிபருக்கு வழங்கப்பட்டு சர்ச்சைக்குள்ளான ''மோடி குர்தா''

"நாங்கள் தான் மோடிக்கு 1989 முதல் ஆடைகளை தயாரித்து, வடிவமைத்து வழங்கி வருகிறோம்"-ஜாட்ப்ளூ லைஃப் ஸ்டைல் நிறுவனம்

தென்கொரிய அதிபருக்கு வழங்கப்பட்டு சர்ச்சைக்குள்ளான ''மோடி குர்தா''

தென்கொரிய அதிபருக்கு மோடி பெயர் பதியப்பட்டு நான்கு வண்ண ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டன

New Delhi:

இந்திய பிரதமர் மோடி தென் கொரிய அதிபருக்கு ஆடை ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் இது குறித்து பல விமர்சனங்களும் எழுந்துள்ளன.

தென்கொரிய அதிபருக்கு ஆடைகளைத் தயாரித்த ஜாட்ப்ளூ லைஃப் ஸ்டைல் நிறுவனத்தின் இயக்குநர் பிபின் செளஹான் இது குறித்து கூறும்போது '' நாங்கள் தென்கொரிய அதிபருக்கு வழங்கிய ஆடை என்பது ''பந்தகாலா'' எனும் வகையான ஆடை. இதுபோன்ற ஆடையை நேரு, வல்லபாய் பட்டேல் ஆகியோர் அணிந்துள்ளனர். ஆனால் இப்போது அது மோடி அணியும் ஆடையாக விற்கப்படுகிறது. "இதற்கும் நேரு அணிந்ததற்கும் என்ன வித்தியாசம் என்றால் அதைவிட இது கொஞ்சம் நீளம் அதிகம்" என்றார்.

மேலும், "இது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் மட்டுமே இருந்தது. 2014-க்கு பின் மோடி இதில் வண்ணங்களைச் சேர்க்க சொன்னார். சொல்லப்போனால் இதை ப்ராண்ட் ஆக்கியதே மோடி தான். நாங்கள் தான் மோடிக்கு 1989 முதல் ஆடைகளை தயாரித்து, வடிவமைத்து வழங்கி வருகிறோம்" என்றார்.

இது குறித்து ட்விட் செய்துள்ள காஷ்மீர் முதல்வர் '' இதுநாள் வரை இது நேரு ஜாக்கெட் என்று தான் அழைக்கப்பட்டுவந்தது. ஆனால் இப்போது இது மோடி ஜாக்கெட் என்று அழைக்கப்படுகிறது. 2014-க்கு முன் அப்படி ஒரு விஷயமே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கு பதிலளித்துள்ள ஆடை வடிமைப்பாளர்கள் ''முன்பு நேரு, பட்டேல் அணிந்த ஜாக்கெட்டுகள் அதிக பணம் தந்து வாங்கும் மக்கள் அணிபவையாக மட்டுமே இருந்தது. தற்போது மோடி, பெரும்பான்மையான மக்களிடத்தில் இதனை கொண்டு சேர்ந்த்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

.