நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இயக்கிய இரண்டு பெண் இயக்குநர்களில் விஜய நிர்மலாவும் ஒருவர் ஆவார்
ஹைலைட்ஸ்
- Vijaya Nirmala has died in Hyderabad
- Vijaya Nirmala began as a child artiste in Telugu movies
- Vijaya Nirmala appeared in over 200 films in Telugu, Tamil and Malayalam
New Delhi: பழம்பெரும் நடிகையும் இயக்கநருமான விஜய நிர்மலா, இன்று காலை ஐதராபாத்தில் இருக்கும் ஓர் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவருக்கு 75 வயது. அவரின் மகன், நடிகர் நரேஷ், இது குறித்த தகவலை ட்விட்டர் மூலம் தெரிவித்தார். மேலும் அவர், தனது தாயாரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று கூறியுள்ளார். ஐதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் நாளை இந்த இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக, விஜய நிர்மலா மரணமடைந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என 200 தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தவர் விஜய நிர்மலா. அவர் 44 தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். விஜய நிர்மலாவின் கணவர் நடிகர் கிருஷ்ணா ஆவார். அவருக்கு நரேஷ் என்கின்ற மகனும் உள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, விஜய நிர்மலாவின் வளர்ப்பு மகன் ஆவார்.
விஜய நிர்மலாவின் வளர்ப்பு மகளான பிரயதர்ஷினியை நடிகர் சுதீர் பாபு திருமணம் செய்துள்ளார். அவர் ட்விட்டரில், “எங்கள் குடும்பத்துக்கு இன்று மிக மோசமான நாள். தீர்க்கதரிசி, சகாப்தம், எனக்குத் தாய் போன்றவரான விஜய நிர்மலா கடவுளின் பாதங்களை அடைந்துள்ளார்” என்று உருக்கமாக ட்வீட்டியுள்ளார்.
அவர் மேலும், “ஆண்களால் நிரம்பியுள்ள இந்த உலகத்தில், பெண்களுக்கென்று பாதை அமைத்துக் கொடுத்தவர் அவர். பெண்கள் முன்னேற்றத்திற்கு உதாரணமாக திகழ்வார் அவர்” என்றும் கூறியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு பட உலகில் அறிமுகமானவர் விஜய நிர்மலா. அதைத் தொடர்ந்து அவர் தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்தார். அவர் நடித்த ரங்குல ரத்னம், பார்கவி நிலையம், சாக்ஷி போன்ற திரைப்படங்களுக்காக பேசப்பட்டவர்.
தனது திரைப் பயணத்தின் பிற்பகுதியில், இயக்குநர் அவதாரம் எடுத்தார் விஜய நிர்மலா. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இயக்கிய இரண்டு பெண் இயக்குநர்களில் விஜய நிர்மலாவும் ஒருவர் ஆவார். பல திரைப்படங்களையும் தயாரித்தவர் விஜய நிர்மலா.
கிருஷ்ணமூர்த்தி என்பவரை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார் விஜய நிர்மலா. அதைத் தொடர்ந்து அவர் நடிகர் கிருஷ்ணாவை மணமுடித்துக் கொண்டார்.