This Article is From Oct 31, 2019

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா காலமானார்! தலைவர்கள் அஞ்சலி!!

83 வயதான தாஸ் குப்தாவுக்கு மனைவியும் மகளும் உள்ளனர். நீண்ட காலமாக தாஸ் குப்தா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா காலமானார்! தலைவர்கள் அஞ்சலி!!

கொல்கத்தா வீட்டில் இன்று காலை 6 மணிக்கு உயிர் பிரிந்தது.

Kolkata:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 83.

மறைந்த தாஸ்குப்தா நீண்ட காலமாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு  மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். தாஸ் குப்தாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

கொல்கத்தாவில் உள்ள வீட்டில் தாஸ் குப்தாவின் உயிர் இன்று காலை 6 மணிக்கு பிரிந்தது. உடல் நலக்குறைவு காரணமாக கட்சிப் பொறுப்புகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு இருந்தார். இருப்பினும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக தொடர்ந்தார். 

திறமையான பேச்சாளர் என்ற முறையில் தாஸ் குப்தா நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டார். தொழிற்சங்கமான AITUC - ன் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். 

கடந்த 1985-ம் ஆண்டின்போது மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாஸ் குப்தா, 2004-ல் பன்ஸ்குரா, 2009 - ல் கட்டால் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

.