This Article is From Nov 28, 2019

சினிமா பாணியில் கடத்தி கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட இளம் மருத்துவர்!! பதறவைக்கும் சம்பவம்!

மண்ணெண்ணெய் ஊற்றி பிரியங்கா எரிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வருகிறது. இந்த வழக்கில் பிரியங்கா பயன்படுத்திய பைக்தான் முக்கிய தடயமாக கருதப்படுகிறது. 

சினிமா பாணியில் கடத்தி கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட இளம் மருத்துவர்!! பதறவைக்கும் சம்பவம்!

குற்றவாளிகளை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Hyderabad:

26 வயதான கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் மர்மமான முறையில் கடத்தி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். சினிமா பாணியில் இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

ஐதரபாத்தின் ஷாத்நகரை சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி. 26 வயதான இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு தனது வீட்டிலிருந்து பணிக்காக கொள்ளுரு கிராமத்திற்கு பைக்கில் அவர் சென்றிருக்கிறார். 

செல்லும் வழியில் அவரது பைக் திடீரென பன்ச்சர் ஆகியுள்ளது. இதையடுத்து தனது சகோதரி பாவ்யாவுக்கு போன் செய்த பிரியங்கா, பைக்கை சரிசெய்ய தனக்கு சிலர் உதவி செய்வதாக கூறியுள்ளார். 

இதைக் கேட்ட பாவ்யா, அருகில் உள்ள டோல் கேட்டுக்கு சென்று விடு; அதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதற்கு பதில் அளித்த பிரியங்கா தான் இருக்கும் இடத்தில், தெரியாத மனிதர்கள் பலரும், சரக்கு லாரிகளும் இருப்பதாக தெரிவித்தார்.

இதன்பின்னர் சகோதரி பிரியங்காவிடம் பேசிய பாவ்யா,'பைக்கை விட்டு விட்டு பாதுகாப்பான  இடத்திற்கு சென்று விடு' என்று கூறியுள்ளார். இதையடுத்து சில நிமிடங்கள் கழித்து பாவ்யா போன் செய்கையில், பிரியங்காவின் மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. 

இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர், பிரியங்கா காணாமல் போனது குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலையில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று, பிரியங்கா வீட்டிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில், அவர் பிரியங்காதான் என்பது உறுதி செய்யப்பட்டது. 

அவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வருகிறது. இந்த வழக்கில் பிரியங்கா பயன்படுத்திய பைக்தான் முக்கிய தடயமாக கருதப்படுகிறது. 

சினிமா பாணியில் நடந்திருக்கும் இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குற்றவாளியை கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும் என்று, மகள் பிரியங்காவை பறிகொடுத்த தந்தை கொதித்துள்ளார். 
 

.