தேர்தல் பிரசார பொருளாக ராமர் கோயில் விவகாரம் மாற்றப்படக் கூடாது என்கிறது வி.எச்.பி.
New Delhi: மக்களவை தேர்தல் முடியும் வரை ராமர் கோயில் பற்றி பேசப்போவதில்லை என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. ராமர் கோயில் விவகாரத்தை இந்த அமைப்பு தீவிரமாக கிளப்பி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து விஷ்வ இந்து பரிஷத்தின் சர்வதேச இணை பொதுச் செயலாளர் சுரேந்திரா ஜெய்ன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விழிப்புணர்வு பிரசாரத்தை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மக்களவை தேர்தல் பிரசாரம் முடியும் வரையில் ராமர் கோயில் விவகாரத்தை எழுப்ப மாட்டோம்.
ராமர் கோயில் பிரச்னை ஒரு தேர்தல் பிரசார பொருளாக மாற்றப்படுவதை விஷ்வ இந்து பரிஷத் விரும்பவில்லை. மத்தியில் புதிய அரசு அமைந்ததும், ராமர் கோயில் பிரச்னை குறித்து பேசப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.