வி.பி. தீன தயாளுவின் நூற்றாண்டு விழாவில் பேசிய வெங்கையா நாயுடு
Bengaluru: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வி.பி. தீன தயாள் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-
பள்ளி மாணவர்களுக்கு சமூக சேவையை கட்டாயமாக்க வேண்டும். என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்.
தீன தயாளு போன்ற தலைவர்களை மாணவர்கள் தங்களுடைய முன் உதாரணங்களாக கொள்ள வேண்டும். பள்ளி பாடத்திட்டங்களில் நீதி நெறியியலை ஒரு பாடமாக கொண்டு வர வேண்டும். இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலன் பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பெங்களூருவில் பிறந்த தீன தயாளு, சாரணர் இயக்கத்தின் தேசிய ஆணையாளராகவும், பெங்களூரு மாநகராட்சி மேயரகவும் இருந்துள்ளார். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக பலமுறை சிறைவாசம் அனுபவித்துள்ளார் தீன தயாளு. இதனை குறிப்பிட்ட துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தீன தயாளு 60 ஆண்டுகளாக சாரணர் இயக்கத்திற்கு சேவையாற்றி உள்ளார் என்று கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)