Read in English
This Article is From Dec 11, 2019

Video: சீனாவில் மிருகக்காட்சி சாலையில் துணி அலசும் சிம்பன்ஸி

இந்த வீடியோ இணையத்தில் பலரையும் மகிழ்வித்துள்ளது. சீன சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.

Advertisement
விசித்திரம்

தனது கூண்டிற்குள் டிஷர்ட்- ஐ துவைக்கும் யுஹூய்

சீனாவில் ஒரு மிருகக்காட்சி சாலையில் ஒரு சிம்பன்சி துணிகளை அலசும் வீடியோ பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. யுஹுய், 18 வயது ஆண் சிம்பன்ஸி, வெள்ளை சட்டையை சோப்பு கொண்டு தேய்த்து அலசுகிறது, தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் உள்ள லெஹ் லெடு தீம் பூங்காவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 

யுஹூயின் பாதுகாப்பாளரான சூ தனது துணிகளை பேசினில் துவைப்பதை சிம்பன்ஸி பார்க்கும் என்று கூறியுள்ளார். எனவே குரங்கு தான் செய்த வேலையை திரும்ப செய்கிறதா என்பதை பார்க்க சட்டை மற்றும் சோப்பினை வைத்துச் சென்றுள்ளார் சூ.

“நான் குரங்கிற்கு ஒருபோதும் கற்பிக்கவில்லை. ஆனால் அது என்னை இடைவிடாமல் கவனித்தது. இதை தானாக செய்யும் என்று கூட நினைத்தேன். செய்ததை பார்த்ததும் வியந்து போனேன்” என்று கூறினார். 

Advertisement

  .  

வீடியோ காட்சிகள் ஆன்லைனில் வைரலாக பகிரப்பட்டது. சோப்பு போட்டு தேய்த்து தண்ணீரில் அலசுவதை பார்க்க முடிந்தது. 

Advertisement

இந்த வீடியோ இணையத்தில் பலரையும் மகிழ்வித்துள்ளது. சீன சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. 

யுஹூய் குரங்கு மிகவும் ஆர்வமிக்க குணம் கொண்டது என்றும் எந்த செயலையும் பார்த்ததும் பின்பற்றக்கூடியது என்று மிருகக்காட்சி சாலையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement