Read in English
This Article is From Nov 11, 2018

’சர்கார்’ படம் பார்த்து ஆக்ரோஷமான விஜய் ரசிகர்கள்; இலவசப் பொருட்கள் உடைப்பு!

அதிமுகவினரின் தொடர் போராட்டம் உள்ளிட்ட நெருக்கடிகளை தொடர்ந்து, சர்கார் திரைப்படத்தில் வரும் அந்த சர்ச்சை காட்சிகள் மட்டும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
தெற்கு

அதிமுக-வுக்கு எதிராக தொடர்ந்து கொதித்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்

Chennai:

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான அரசியல் த்ரில்லர் படமான 'சர்கார்' திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசை விமர்சிக்கும் வகையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், ஜெயலலிதாவின் இயர்பெயர் என கூறப்படும் கோமளவல்லி பெயர் வில்லியாக வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு சூட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கோவை, மதுரை, சென்னை என தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் சர்கார் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் முன்பிருந்த சுவரொட்டிகளை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய அந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதிமுகவினரின் தொடர் போராட்டம் உள்ளிட்ட நெருக்கடிகளை தொடர்ந்து, சர்கார் திரைப்படத்தில் வரும் அந்த சர்ச்சை காட்சிகள் மட்டும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.


படத்தில் இலவசங்களை எரிக்கும் வகையில் வரும் காட்சி ஒன்றுதான் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. அதிமுக தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஒருபுறம் இருந்தாலும், விஜய் ரசிகர்கள் அந்தக் காட்சியை உண்மையாக செய்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோவாக அப்லோட் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக அந்த வீடியோக்களும், அதையொட்டி வரும் மீம்ஸ்களும் தான் சோஷியல் வைரல்.

Advertisement

ரிலீஸுக்கு முன்னதாக சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த மனுவில், நான் கொடுத்த புகாரின் அடிப்படையில், தென்னிந்திய திரைப்படஎழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் இரு தரப்பையும் அழைத்து விசாரித்தார். இறுதியில் இரு கதைகளும் ஒரே கதை என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

எனவே, ‘சர்கார்' திரைப்படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும். ‘சர்கார்' படம்திரையிடும்போது கதை ஆசிரியர் என்று என்னுடைய பெயரை திரையிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்டது. இறுதியில் படக்குழுவினருக்கும் வருணுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது. சர்கார் ரிலீஸ் தொடர்பாக இருந்த சர்ச்சையும் ஓய்ந்தது.

Advertisement

ஆனால், அடுத்த சர்ச்சையில் சர்கார் சிக்கியுள்ளது. விஜய் கடைசியாக நடித்த ‘மெர்சல்' திரைப்படமும் ஜிஎஸ்டி குறித்து சொன்ன வசனங்களுக்காக பாஜக-வினர் கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement