காபியை சுத்தப்படுத்தும் நெதர்லாந்து பிரதமர் ருட்டே
ஹைலைட்ஸ்
- இந்த செயல் குறித்து பலர் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்
- சிலர் இவரின் செயல் குறித்து சந்தேகமும் எழுப்பியுள்ளனர்
- நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது
நெதர்லாந்து நாட்டின் பிரதமர் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் செய்த செயல் ஒன்று பலதரப்பட்ட மக்களை நெகிழ வைத்துள்ளது.
நெதர்லாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் மார்க் ருட்டே. இவர் இன்று நாட்டின் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். அப்போது, தனது கையில் ஒரு கப் காபியையு எடுத்து வந்தார். ஒரு இடத்தில் கை தவறவே, காபியை கீழே கொட்டிவிட்டார். அப்போது, தரையை சுத்தப்படுத்தும் மாப் வைத்துக் கொண்டிருந்த ஊழியரைப் பார்த்தார். உடனே, மாப்-ஐ வாங்கி தான் கீழே கொட்டிய காபியை எந்த வித தயக்கமும் இன்றி சுத்தப்படுத்த ஆரம்பித்தார். இதை அருகிலிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் தரவேற்றினார். ருட்டேவின் இந்த செயலைப் பற்றி இணையத்தில் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
சிலர், வீடியோ எடுக்கப்படுவதைப் பார்த்து தான் அவர் மாப் போட்டு தரையை துடைத்தார் என்று கமென்ட் செய்தாலும், ஒரு பிரதமர் தான் கொட்டிய காபியை சுத்தப்படுத்தியது பலரது இதயங்களை வென்றுள்ளது.
Watch the clip here: